Vettri

Breaking News

அலி சப்ரி ரஹீமுக்கு இடைக்கால தடை!!




 கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏராளமான தங்கம் உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டு பின்னர் அபராதம் செலுத்தி விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்புனர் அலி சப்ரி ரஹீமுக்கு ஒரு மாத காலத்திற்கு பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்க இடைக்கால தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அவைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது இதனை அறிவித்தார்.

சிறப்புரிமைகள் தொடர்பான குழுவின் பரிந்துரையின் பேரில் இன்று (06) முதல் ஒரு மாத காலத்திற்கு இந்த இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம் இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று சபாநாயகரும் கண்டித்துள்ளார்.

No comments