Vettri

Breaking News

பெரிய வெங்காய ஏற்றுமதி தடையை மறு அறிவித்தல் வரை நீடிப்பு !!




 பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைக்கவும் நோக்கமாக கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்த நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதியுடன் இந்த ஏற்றுமதி தடை நிறைவடையவிருந்தது.

பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதி தடை​யை காலவரையின்றி மேலும் நீடிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகிலேயே அதிக வெங்காயம் ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாவாகும்.

இந்தியா விதித்துள்ள இந்த தடையால், பல நாடுகளில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

இலங்கையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்து வருவதற்கு இந்தியா விதித்துள்ள தடையே பிரதான காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.


No comments