Vettri

Breaking News

கத்தோலிக்க மக்களின் புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை ஞாயிறுடன் நேற்று ஆரம்பம்!!




 கத்தோலிக்க மக்களின் புனித வாரத்தின் தொடக்க நாள் குருத்தோலை ஞாயிறுடன் (24_03_2024)இன்று ஆரம்பமாகின்றது.

அன்னையாம் திருச்சபையானவள் குருத்தோலை ஞாயிறு திருப்பலி கொண்டாட்டத்துடன் ஒவ்வொருவரையும் இயேசுவின் பாடுகள் . மரணம் , உயிர்ப்பு என்னும் மாபெரும் புனித மறை நிகழ்வை தியானிக்க அழைக்கும் நாளாக இது அமைந்துள்ளது.

இச்சிந்தனை ஊடாக அன்பு எவ்வளவு பெரியது என்பதை மக்கள் அறிய வேண்டும் என்ற இறைத் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற இயேசு எருசலேம் நகர் நோக்கி புனித பயணம் நினைவு கூர்ந்து கத்தோலிக்க மக்கள் இந்த ஞாயிறு (24_03_2024) தினத்தை நினைவு கூர்ந்தனர்.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் கத்தோலிக்கர் செறிந்து வாழும் ஒரு பங்கான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கு மக்கள் ஞாயிறு (24) இன்று நினைவு கூறப்பட்ட கொண்டாட்டமே இந்நிகழ்வாகும்










இவ்  நிகழ்வானது அன்னைவேளாங்கன்னி முற்சந்தியில் இருந்து மக்கள் பவனியாக, குருத்தோலைகளுடன் ஓசான்னா கீதம் பாடி பங்குத்தந்தையை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அருட்பணி சுலக்சன்  அடிகளாரால் தலைமையில்  திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட்டது. இத் திருப்பலியினை பங்கு மக்கள் சிறப்பித்ததுடன் அருட்சகோதரிகள், அருட்சகோதரர்களும் மற்றும் ஏராளமான இறை மக்களும கலந்துகொண்டதுடன், குருத்தோலைகளும் பெற்றுக்கொண்டனர்.


 செய்தியாளர்

   டினேஸ்

No comments