நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!!!
நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு நாளை (08) முதல் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வடக்கு மற்றும் மலையக மார்க்கங்களில் இந்த ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.M.J.இதிபொல தெரிவித்தார்.
இன்றிரவு தபால் ரயில் சேவைக்கு முன்னதாக பதுளை நோக்கி ரயிலொன்று புறப்படவுள்ளதுடன், நாளை காலை 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளது.
அத்துடன், எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி காலை 7.45 மற்றும் மாலை 5.20 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி இரண்டு ரயில்கள் பயணிக்கவுள்ளன.
இதனை தவிர நாளைய தினம் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலும் விசேட ரயிலொன்று சேவையில் ஈடுபடவுள்ளது.
No comments