விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் 22 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.
விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்தநிலையில், பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி அவர் இன்று மன்றில் முன்னிலையாகாத நிலையில், வழக்கை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டதுடன் பிரதிவாதியை அன்று நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணையும் விடுக்கப்பட்டுள்ளது.
No comments