விவசாயி சின்னம் உங்களுக்கு ராசியில்லை - நீதிபதி அட்வைஸ் - அதிர்ந்த சீமான்
நாம் தமிழர் கட்சி தற்போது கரும்பு - விவசாயி சின்னத்திற்கு போராடி வருகின்றது.
விவசாயி சின்னம்
நாம் தமிழரின் சின்னமான கரும்பு - விவசாயி சின்னம் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது தர்மசங்கடத்தில் உள்ளது கட்சி.
இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பேட்டிகளில் பேசி வரும் சீமான், எப்படியேனும் தான் கட்சியின் சின்னத்தை மீட்டு விடுவேன் என நம்பிக்கையுடன் பேசி வருகின்றார்.
தேர்தல் ஆணையம் வாதம்
இந்நிலையில் தான் இந்த வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து தங்களுக்கு கரும்பு - விவசாயி சின்னத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்ய ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் சார்பில் கோரப்பட்டது.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த விளக்கம் வருமாறு,
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தான் ஒரு பொதுவான சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும். குறிப்பிட்ட வாக்கு வங்கி இல்லாத, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு ஒவ்வொரு தேர்தலின் போதும் தனி சின்னம் ஒதுக்கீடு செய்யப்படும்.
சில சமயங்களில் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளே தேர்தல் ஆணையத்தை அணுகி தங்களின் சின்னத்தை மீண்டும் ஒதுக்கீடு செய்யுங்கள் என்று கோரும் நிலையில், அதே சின்னம் மீண்டும் வழங்கப்படும்.
ராசி இல்லை
அப்படி கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி கோரிக்கை விடுக்க அவர்களுக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவ்வாறு தேர்தல் ஆணையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், முதலில் கோருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது என்று சுட்டிக்காட்டி, நாம் தமிழர் கட்சிக்கும், கரும்பு விவசாயி சின்னத்திற்கும் ராசி இல்லை என்று கருதுவதாக சொன்ன நீதிபதி, அதன் காரணமாக வேறு சின்னத்தில் போட்டியிடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்.
No comments