சஹரானின் மைத்துனர் கைது
மட்டக்களப்பு, கலபாலச்சேனை பகுதியில் காத்தான்குடி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சஹரானின் மைத்துனர் என அடையாளம் காணப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலபாலச்சேனை பிரதேசத்தில் சட்டவிரோத கூட்டம் ஒன்று நடைபெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது சஹரானின் மைத்துனர் உட்பட சுமார் 30 பேர் கொண்ட குழுவை பொலிஸார் கைது செய்தனர். எவ்வாறாயினும், எந்தவொரு சட்டவிரோத சந்திப்பிலும் தாம் ஈடுபடவில்லை என மறுத்த சந்தேக நபர்கள் தாங்கள் சீட்டாட்டம் ஆடுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணை நடத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments