Vettri

Breaking News

6 வயது சிறுமி கிணற்றில் விழுந்து மரணம்!!




 மதுரங்குளிய விருத்தோடு பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் வீட்டில் அரைவாசியாக கட்டப்பட்டிருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக மதுரங்குளிய பொலிஸார் தெரிவித்தனர்.

மதுரங்குளிய விருத்தோட்டை வசிப்பிடமாகக் கொண்ட ஹலாம் பாத்திமா சனா (06) விருத்தோடு முஸ்லிம் கல்லூரியில் இந்த வருடம் முதலாம் தரத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமி. இவ்வாறு உயிரிழந்த சிறுமி குடும்பத்தில் இளையவர் எனவும் அவருக்கு 11 வயதில் ஒரு சகோதரியொருவர் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments