Vettri

Breaking News

USF SRILANKA அமைப்பின் சுதந்திர தின நிகழ்வு !!!



















 


பாறுக் ஷிஹான்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு USF SRILANKA அமைப்பின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கமு/ லீடர்  எம். எச்.எம்.அஷ்ரப் வித்தியாலயத்தில் மரம் நடுகை நிகழ்வும் மற்றும் சிரமதான நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக Rizley Musthafa Education Aid அமைப்பின் தலைவர் றிஸ்லி முஸ்தபா  கலந்துகொண்டு சிறப்பித்தார். 

இந்நிகழ்வில்  USF Sri Lanka அமைப்பின் ஸ்தாபகத் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான  அ.கபூர் அன்வர் ,பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், USF SRILANKA அமைப்பின் உறுப்பினர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments