Vettri

Breaking News

நற்பிட்டிமுனை Prince College ன் வருடாந்த Graduation Ceremony மற்றும் Concert நிகழ்வுகள்!!


























பாறுக் ஷிஹான்

நற்பிட்டிமுனை Prince College ன் வருடாந்த Graduation Ceremony மற்றும் Concert நிகழ்வுகள்  நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலய கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் சுகாதார இராஜாங்க அமைச்சரும்  பாராளுமன்ற உறுப்பினருமான    பைசால் காசிம்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அத்துடன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்,  கல்முனை கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜிஹானா அலீப், சட்டமுதுமாணி ஏ.ஜெ.பர்சாத் ,கௌரவ அதிதிகளாகவும்  அதிதிகளாகவும் விசேட அதிதிகளாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.நாசர் கனி, அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல் பதுர்தீன், நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலய அதிபர் சி.எம்.நஜீப், முன்னாள் கல்முனை  மாநகர சபை உறுப்பினர் யு.எல்.தௌபீக், காணி பயன்பாட்டு உத்தியோகத்தரும் prince college இன் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.எம்.றியாஸ், காணி உத்தியோகத்தர் ஏ.ஆர் .நிசாப்தீன் ,சிரேஸ்ட ஊடகவியலாளர் ஏ.எஸ்.முஜாஹித் , கல்முனை உயர் நீதிமன்ற உத்தியோகத்தர் எம்.ஐ.நிரோஸ் ,சம்மாந்துறை மத்திய கல்லூரியின் ஆசிரியர் ஐ.எம்.உபைத்துல்லாஹ், கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் ஆசிரியர் எச்.எம்.ஜெமீன்,  பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆசிரியர் அஸ்லம் ,இளைஞர் சேவை மன்ற உத்தியோகத்தர் எம்.ரி ஹாறூன், ஆசிரியர் ஏ.எல்.நயீம், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


மேலும் அதிதிகளாக கலந்து கொண்டவர்கள் தத்தமது உரையின் போது ஆங்கில கல்வியின் அவசியம் எதிர்காலத்தில் ஆங்கில கல்வியுடன் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் ஆதிக்கத்தை குறிப்பிட்டு மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் அறிவுரைகள் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

 மாணவச் செல்வங்களுக்கான நினைவுச் சின்னங்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கிவைத்திருந்தார்.2012 ஆண்டு இக்கல்லூரி பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டு அதன் ஊடாக நற்பிட்டிமுனை கல்வி அத்தியாயமாக திகழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments