Vettri

Breaking News

ஏறாவூர் சமூக நல அமைப்பினால் (ESWO) மதரஷா ஒன்றிற்கு மின்விசிறிகள் கையளிப்பு!!











 சமூக,ஆன்மீக விடயங்களில் முனைப்பான சேவைகளையாற்றிவரும் ஏறாவூர் சமூக நல அமைப்பு(ESWO) தன்னுடைய செயற்பாடுகளின் வரிசையில் இன்று (2024.02.18) ஏறாவூர் மிச்நகர் பரகா ஜூம்ஆ பள்ளிவாயலில் இயங்கி வரும் மஃஹதுல் பரகா பகுதி நேர மதரஷாவுக்கு அவசியமாகவிருந்த மின்விசிறிகளை கையளித்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ். 


எம்.எஸ்.எம். றசீன்


இந்த நிகழ்வானது இன்று சுபஹ் தொழுகைக்குப் பின்னர் மஃஹதுல் பரகா பகுதி நேர மதரஷாவின் அதிபரும் மிச்நகர் பரகா ஜூம்ஆ பள்ளிவாயலின் பேஷ் இமாமுமான அஷ்ஷெய்க் ARM.அப்துல் ராபி அவர்களது தலைமையில் மதரஷாக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த நிகழ்வில் சமூக சேவைகள் உத்தியோகத்தர் SAC.நஜிமுதீன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு,


ஏறாவூர் சமூக நல அமைப்பின் தலைவர் A.சமீம், செயலாளர், HMM.றசீம், பொருளாளர் M.இஸ்ஸதீன் உட்பட பல உறுப்பினர்கள், மதரஷாவின் உஸ்தாத்மார்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.


இந்த உதவியை வழங்குவதற்காக பல்வேறு நன்கொடைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கிய ESWOவின் உறுப்பினர்களுக்கு மனநிறைவான நன்றிகள்.

No comments