Vettri

Breaking News

மேற்கூரை இல்லாத பயணிகள் தரிப்பிடங்கள்;மீள புனரமைத்து வழங்குவது யாருடைய பொறுப்பு?







செ.துஜியந்தன்


கிழக்கில் பயணிகள் தங்கும் பல பஸ் தரிப்பிடங்கள் மேற்கூரையின்றி சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மழை, வெயில் காரணமாக பல்வேறு சிரமங்களுக்குள்ளாகிவருகின்றனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள பயணிகள் தரிப்பிடம், கல்லடி இசை நடனக் கல்லூரி தரிப்பிடம், ஆரையம்பதி கோவில்குளம் தரிப்பிடம், செட்டிபாளையம் தரிப்பிடம் உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ள பயணிகள் தரிப்பிடங்களே மேற்கூரையின்றி சேதமடைந்துள்ளதுடன், அதிலுள்ள இருக்கைகளும் பழுதடைந்துள்ளது. இதனால் அவசரத்திற்கு பயணிகள் கடும் மழை, கடும் உஸ்ணம் காரணமாக இளைப்பாறிச் செல்வதற்கு வருகைதருகின்ற போதில் பல்வேறு சிரமங்களுக்குள்ளாகின்றனர்.


இவ்வாறான பயணிகள் தரிப்பிடங்களை மீள புனரமைத்து வழங்குவது யாருடைய பொறுப்பு, மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம்பெறும்  இப்பிரதேச அரசியல் மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஏன் அக்கறை செலுத்தாதுள்ளனர் என விசனம் தெரிவிக்கின்றனர். பிரதானவீதிகளில் மிக நீண்ட நேரம் காத்திருந்து போக்குவரத்து செய்யும் மக்களின் நிலையறிந்து இங்கு மிக நீண்டகாலமாக சேதமடைந்துள்ள பயணிகள் தரிப்பிடங்களை மீள புனரமைத்து வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

No comments