மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடி மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!!!
மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடி மற்றும் கோறளைப்பற்று வாழைச்சேனை போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவ.சந்திரகாந்தன் தலைமையில்
இவ்விரு பிரதேச செயலக பிரிவுகளுக்குமான 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமாக இக் கூட்டங்கள் அமையபெற்றுள்ளன. மண்முனை தென்எருவில் பற்று களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகப் பிரிவில் திருமதி.சிவப்பிரியா வில்வரட்ணம் அவர்களின் ஏற்பாட்டிலும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி.ஜெயநந்தி திருச்செல்வம் அவர்களின் ஏற்பாட்டிலும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தலைமையிலும் இன்றையதினம் இக் கூட்டங்கள் இடம்பெற்றன.
குறிப்பாக இப் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் வீதிகளை செப்பனிடுவது தொடர்பிலும் , இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கான அனுமதியினை பெற்று கிடைக்கப்பெறும் வளங்களை பயன்படுத்தி உற்பத்தியினை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டதுடன் காணி பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
மேலும் இப்பிரதேசத்தின் விவசாயம், நீர்ப்பாசனம், கல்வி, சுகாதாரம், சுற்றாடல் உட்பட ஏனைய அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்கள் தொடர்பிலும் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது மேலும் மக்கள் நலன்சார் திட்டங்கள் பலவற்றிற்கும் ஒருங்கிணைப்பு குழு தலைவரினால் அனுமதியளிக்கப்பட்டது.
இக்கூட்டங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இரா.சாணக்கியன், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கோவிந்தன் கருணாகரன், உதவி பிரதேச செயலாளர் K.அமலினி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கங்காதரன், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தனிப்பட்ட செயலாளர் தம்பிராஜா தஜீவரன் போன்றோர் உட்பட துறைசார் அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments