நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தின் பாலஸ்தான விசேட பூஜை நிகழ்வு இடம்பெற்றது
நுவரெலியா சீத்தா எளிய வனத்தில் அருளாட்சி புரியும் சீதையம்மன் ஆலயத்தில் எதிர் வரும் மே மாதம் 19.05.2024 வெகு விமர்சையாக நடைபெறவுள்ள மஹாகும்பாபிஷேக பெருவிழாவினை யொட்டி பாலஸ்தான விசேட பூசை நிகழ்வு ஞாயிற்று கிழமை (11.02.2024) காலை இடம்பெற்றது.
இதன்போது யாகபூசை இடம்பெற்று பின் பாலஸ்தீனம் செய்யப்பட்ட தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்களை ஆலய பிரதம குருக்கள் தலைமையில் நடத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மகேஸ்வர பூஜையுடன் பகல் அன்னதானம் வழங்கிவைக்கப்பட்டது.
இந்த பாலஸ்தான நிகழ்வில் சீதையம்மன் ஆலய தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பக்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்திகள் -டினேஷ்
No comments