பெரியநீலாவணையில் நான்கு வயது சிறுவன் விபத்தில் பலி!!
செ.துஜியந்தன்
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை கிராமத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்கு வயது சிறுவன் பலியாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் பெரியநீலாவணை விஷ்ணு வித்தியாலய வீதியைச் சேர்ந்த அருணா ஹர்ஷான் (4வயது) சிறுவனே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று(29) காலை பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிவந்த வாகனம் உயிரிழந்த சிறுவனின் சகோதரியை ஏற்றிக் கொண்டு புறப்பட தயரான போது பின்பக்கமாக நின்ற சிறுவன் மீது மோதியதில் இவ் விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. 2020 -03-21 இல் பிறந்த சிறுவன் இன்னும் இருபது நாட்களில் மார் 21 இல் நான்கு வயதை பூர்த்தி செய்ய இருந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
No comments