Vettri

Breaking News

புதிய தேசம் அமைப்போம்” தென்கிழக்கு பல்கலைகழக சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும்!!!




 புதிய தேசம் அமைப்போம்” தென்கிழக்கு பல்கலைகழக சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும்!












பாறுக் ஷிஹான்

நாட்டின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தலைமையில் இடம்பெற்றது.

 “புதிய தேசம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் இவ்வாண்டின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறுகிற அதேவேளை; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். மஜீத், சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல், பல்கலைக்கழக வேலைப்பகுதியின் பொறியலாளர் எம்.எஸ்.எம். பஸில்,பிரதம பாதுகாப்பு அதிகாரி ஏ.எம்.ஜாபிர், விரிவுரையாளர்கள், நிர்வாக மற்றும் கல்விசார ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் பல்கலைக்கழக பாதுகாப்பு தரப்பினரின்  அணிவகுப்பு மரியாதை நிகழ்வும் இடம்பெற்றது.

No comments