Vettri

Breaking News

பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!!!











செ.துஜியந்தன்


களுதாவளை சமூக பொருளாதார கல்வி அபிவிருத்தி சங்கம்,{SEEDA} கத்தாரில் தொழில் புரியும் உறவுகளின் பிரதான அனுசரணையில்  பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலிருந்து பாடசாலை செல்லும்  மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்பாட்டை முன்னெடுத்து வருகிறது.

இதற்கமைய இன்று பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட தென் எருவில் கோட்டத்தில் உள்ள சுமார் 19 பாடசாலை சேர்ந்த 475 மாணவர்களுக்கு  கற்றல் உபகரணங்கள் வழங்குகின்ற  முதல்கட்ட  நிகழ்வு  பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலய தேசிய பாடசாலையில் சீடா அமைப்பின் தலைவர் க.கிஷோபன்  தலைமையில் இடம்பெற்றது 


இந்நிகழ்வில் பட்டிருப்பு பிரதிக் கல்விப்பணிப்பாளர் இ. ஜீவானந்தராசா  , முறைசாரக்கல்விப் பிரிவின் இணைப்பாளர் றீற்றா கலைச்செல்வன் மற்றும்  சீடா உறுப்பினர்கள் ,  பட்டிருப்பு வலயக்கல்வி அதிகாரிகள்  பாடசாலைகளின் அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்களென பலரும் கலந்து கொண்டனர்.

No comments