Vettri

Breaking News

கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு; அமைச்சரவை அங்கீகாரம் !!




 இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இராஜாங்க சுற்றுலா அமைச்சர் டயானா கமகே அத தெரணவிற்கு இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர், இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றார்.

உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் டொலரில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments