கொழும்பில் பல வீதிகள் இன்று மூடப்படவுள்ளன!!
நிலத்தடி குழாய்கள் பதிக்கப்படுவதால் கொள்ளுப்பிட்டி மற்றும் கொம்பனி வீதி பகுதிகளில் உள்ள பல வீதிகள் இன்று (05) முதல் 03 கட்டங்களாக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, உத்தரானந்த மாவத்தை, நவம் மாவத்தை முதல் புகையிரத கடவை வரையிலான பகுதி இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை முதல் நவம் மாவத்தை வரையிலான பகுதி பெப்ரவரி 20 முதல் மார்ச் 04 வரையிலும், உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை வழியாக ரொட்டுண்டா கார்டன் சந்தி பகுதி மார்ச் 05 முதல் 11 வரை மூன்றாம் கட்டமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments