மகிந்த களமிறக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க மக்கள் தயார்: மொட்டுக் கட்சி எம்.பி ஆரூடம்!!!
மகிந்த ராஜபக்சவை நேசிக்கும் மக்களே இந்நாட்டில் உள்ளனர். அவர் களமிறக்கும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(26.02.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்
அவர் மேலும் கூறியதாவது,
"அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி எமது தரப்புக்குச் சவால் அல்ல. ஏனெனில் அக்கட்சியின் தலைவரிடம் தலைமைத்துவப் பண்பு கிடையாது. இதை நாம் கூறவில்லை. அக்கட்சியின் உறுப்பினர்கள்தான் குறிப்பிட்டு வருகின்றனர்.
நாம் களமிறக்கியுள்ள அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
இம்முறையும் வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார், மகிந்த ராஜபக்ச பெயரிடும் வேட்பாளரை வெற்றி பெற வைப்பதற்கு நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
No comments