Vettri

Breaking News

சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ஓட்டமாவடி மாணவி!




 

ஓட்டமாவடி நியூ டலண்ட் சிறுவர் கழகத்தின் தலைவி முகம்மது இஸ்மாயில் ரணா சுக்ரா பூட்டானில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இவர் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதைகூறல் போட்டியில் தேசிய விருது பெற்றதன் அடிப்படையில் சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மாணவியான முகம்மது இஸ்மாயில் ரணா சுக்ரா பூட்டானில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டின் ஒரு அங்கமான தெற்காசிய சிறார்கள் எதிர்நோக்கும் சமகால சவால்கள் தொடர்பாக நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் பங்கு கொள்ளவுள்ளார். இவர் ஓட்டமாவடி காகிதநகர் மில்லத் வித்தியாலய அதிபரும் எழுத்தாளருமான முகம்மது இஸ்மாயில் (வாழை மயில்) தம்பதிகளின் புதல்வியாவார்.

No comments