Vettri

Breaking News

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வாகனம்!!!




 


யாழ்ப்பாண நகரின் மத்திய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. 

குறித்த சம்பவம் இன்று (26.02.2024) இடம்பெற்றுள்ளது. 

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட வெற்று காணி ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்ட  வாகனமே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.

மேலதிக விசாரணை

இந்நிலையில், வாகனமொன்றில் ஏற்பட்ட மின் கசிவே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

எனினும், யாழ். மாநகரசபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுப்படுத்தியதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments