Vettri

Breaking News

இலங்கையின் மூன்று விமானநிலையங்களை முகாமைத்துவம் குறித்து அதானி குழுமத்துடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை!!




 கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் உட்பட   இலங்கையின் மூன்று விமானநிலையங்களை முகாமைத்துவம் செய்வது குறித்து அதானி குழுமத்துடன்  இலங்கை அரசாங்கம்  பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளது


அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விமானநிலையம் ரத்மலானை விமானநிலையம் மத்தள விமானநிலையம் குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

இந்த விமானநிலையங்களின் நிர்வாகத்தில் முகாமையில் அதானி குழுமத்தை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என ஹரீன்பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி காண்கின்ற நிலையிலேயே விமானநிலையங்களின் நிர்வாகத்தை தனியாரிடம் வழங்குவது குறித்து இலங்கை ஆராய்ந்துவருகி;ன்றது.

ஒருவருடகாலத்தில் இலங்கைக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை 1.48 மில்லியனாக அதிகரித்துள்ளது.

எனினும்; இதனை கையாளக்கூடிய நிலையில் இலங்கையின் விமானநிலையங்கள் இல்லை அவை அழுத்தங்களிற்குள்ளாகியுள்ளன.

இதன் காரணமாக தனியார் துறையை உள்வாங்குவது வளங்களை விஸ்தரிப்பதற்கும் பயணிகளின் அனுபவங்களை சிறப்பானதாக மாற்றுவதற்கும் உதவும் என இலங்கை எதிர்பார்க்கின்றது.

இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் அதானி குழுமம் வெளிநாட்டில் விமானநிலையங்களை நிர்வகிக்கும் முதலாவது வாய்ப்பை  பெறும்.அதானி குழுமம் ஏற்கனவே உலக நாடுகளில் துறைமுகம் மற்றும் மீள்சக்தி துறைகளில் காலடி பதித்துள்ளது.


No comments