Vettri

Breaking News

தம்பட்டம் அடிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள்: மனுஷ எம்.பி சுட்டிக்காட்டு!!!




 

இலங்கையின் வரலாற்றை ஆராயும் போது எதிர்காலக் கண்ணோட்டம் கொண்ட தலைவர்களை விட தம்பட்டம் அடிக்கும் தலைவர்களுக்கே இடம் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமது எதிர்காலம் குறித்து சிந்திக்கும் இளைஞர்கள் அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கேகாலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ''ஜெயகமு ஸ்ரீலங்கா'' மக்கள் நடமாடும் சேவையின் இரண்டாம் நாளான அன்று ஸ்மார்ட் யூத் கிளப் வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான வீழ்ச்சி

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஒன்றரை வருடத்திற்கு முன்பு மிக மோசமான இடத்திற்கு வீழ்ந்த இலங்கை, தற்போது உலகிற்கு அதிசயமாக மாறியுள்ளது.

இவ்வாறானதொரு யுகத்தில்தான் நாம் கேகாலை இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வழங்க கேகாலைக்கு வந்துள்ளோம். இளைஞர்களே உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியான தருணம் யாது என்று கேட்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்

தொழில் பயிற்சி

வேறு சில இடங்களில் நல்லவை ஏழைகளிடம் இருப்பதாகக் கற்பிக்கப்படுகிறது. கடவுள் ஏழைகளுடன் மட்டுமே இருக்கிறார் . இந்த வகையான எண்ணங்கள் வறுமைக்கு இட்டுச் செல்கின்றன அல்லது ஒருவரின் துக்கத்தை நேரடியாக வெறுப்பாக மாற்றுகின்றன.

நம்மை துன்பத்திலும், வறுமையிலும் சிக்க வைத்து, அதை சாதகமாக்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அதை அரசியல் இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

ஆனால் நம் இலக்கியங்களில் இதற்கு எதிராக எழுதப்பட்ட நேர்மறையான படைப்புகள் சிலவே உள்ளன. இளைஞர்களே தைரியமாக இருங்கள் அப்போதுதான் நாம் முன்னேற முடியும்.

நாம் எமது வலிமையை வளர்த்துக் கொண்டால், எந்த சவாலையும் எம்மால் முறியடிக்க முடியும். 10,000 இளைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இந்நிலையில், ஹோட்டல் முகாமைத்துவத்தில் பயிர்ச்சி பொறுங்கள் சுகாதாரத் துறையில் காணப்படும் பராமரிப்பு சேவைகளுக்கு உங்களைப் பரிந்துரைக்க நாங்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையை தெரிவு செய்கிறோம்.

No comments