இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி!!
பாறுக் ஷிஹான்
சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (3) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர்.
நான்கு இளைஞர்கள் ரேஸ் ஓட்டம் ஒன்றினை ஏற்படுத்தி இப்பாரிய விபத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான மெயின் வீதியினை நோக்கி காலை நான்கு இளைஞர்கள் இரு மோட்டார் சைக்கிள் மூலம் ரேஸ் ஓடிய வேளை வேகக் கட்டுப் பாட்டினை இழந்தமையினால் ஜும்ஆ பள்ளிவாசல் சுவர் பகுதியில் மோதுன்டு இரு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
No comments