Vettri

Breaking News

கொழும்பு பஞ்சிகாவத்தை தீ பரவலுக்கு மின் கசிவே காரணமாம்!!!




 


கொழும்பு - பஞ்சிகாவத்தை பகுதியில்  அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட தீ பரவலுக்கு மின் கசிவே காரணம் என தெரிய வந்துள்ளது.

இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை  (23) இரவு ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றில் ஏற்பட்ட தீ  பரவலால் அதனை அண்டியதாக காணப்பட்ட விற்பனை நிலையங்களிலும் தீ பரவியதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

தீயைக் கட்டுப்படுத்த  6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.தீ பரவலினால் குறித்த விற்பனை நிலையங்களில் ஏற்பட்ட சேதங்களின் மதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை.

No comments