மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி!!
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் பாரவூர்தியுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் ஏறாவூர் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
No comments