ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை கோரிய அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர்!!!
இலங்கைக்குவிஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர்ரிச்சட் வெர்மா உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபடுவதற்கு முன்னதாக ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட சந்திப்பொன்றில் ஈடுபட்டார் .
ஜனாதிபதியை சந்திப்பதற்காக வந்த ரிச்சட் வெர்மா தனிப்பட்ட சந்திப்பொன்றிற்காக வேண்டுகோள் விடுத்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில்விக்கிரமசிங்க இதற்கு இணங்கியதுடன் மூடிய கதவுகளிற்குள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.தனிப்பட்ட சந்திப்பின்போது அமெரிக்க தூதுவர் ஜூலிசங்கும் பிரசன்னமாகியிருந்தார்.
உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளி;ன் போது பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் குறித்து ஆராயப்பட்டதாகவும் ஜனாதிபதி அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதுடன் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை பயங்கரவாதத்தை எதிர்ப்பு சட்டமூலம் அடுத்த புதிய நாடாளுமன்றத்தின் காலம்வரை பிற்போடப்படும் என ஜனாதிபதி தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவரிடமும் ஜனாதிபதி இதனையே தெரிவித்திருந்தார்.
No comments