ஏறாவூர் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நழீம்!!
ஏறாவூர் கோட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கு நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தார். முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நழீம்
தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட அதிபர் போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்ற ஆசிரியர்களுக்கு அண்மையில் அதிபர் தர நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் கோட்டத்தில் நியமனம் பெற்ற அதிபர்கள் இன்று தங்களுக்கு வழங்கப்பட்ட பாடசாலையில் கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டனர்.
கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்ட அதிபர்களை நேரடியாகச் சென்ற முன்னாள் தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்கள் பொன்னாடை போர்த்தி தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார் இந்நிகழ்வில் பாடசலை ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
No comments