ஏறாவூர் நகரசபை பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும், விடுகை விழாவும்!!
ஏறாவூர் நகர சபை பாலர் பாடசாலையின் கலை நிகழ்வும், விடுகை விழாவும் அறபா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நகர சபையின் விசேட ஆணையாளர் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் இன்று இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி றமீஸா, கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் கணக்காளர் ஆர்.எப் புஷ்ரா, விசேட அதிதிகளாக ஏறாவூர் நகர சபையின் நிருவாக உத்தியோகத்தர் என்.ஏ றசீன், ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம் நஸீர், உட்பட முன்பள்ளி ஆசிரியைகளான கே.எம் சக்கினா பௌசுல், ஏ. பாத்திமா சபானா, நகர சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம் பெற்றதோடு விடுகை பெற்றுச் செல்லும் 24 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நினைவுச் சின்னமும் வருகை தந்த அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டதோடு, மாணவர்களால் கற்பிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
No comments