Vettri

Breaking News

மக்களுக்கு நிவாரணமாக இருபது கிலோ அரிசி ; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!!





 குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணமாக பண்டிகைக் காலத்தில் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோ அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வருட நிவாரணத்தின் மூலம் 24 இலட்சம் பேருக்கு நன்மைகளை வழங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன் மூலம் நாட்டின் மிகக் குறைந்த மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை மானியம் வழங்கப்படவில்லை என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
இன்று பாராளுமன்றத்தில் தனது கொள்கை பிரகடன உரையின் போதே இவ்விடயத்தை ஜனாதிபதி தெரிவித்தார்.

No comments