பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த பொலிஸூக்கு பிணை!!
பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குளியாப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) நேற்று புத்தளம் நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
சம்பவத்தின் பின்னர் குளியாபிட்டிய பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், பின்னர் இது தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று பிற்பகல் குறித்த ஓ.ஐ.சி தனது சட்டத்தரணி மூலமாக நீதிமன்றில் ஆஜராகினார்.
நீதவான் அவரை ரூ. 500,000 பிணையில் விடுவித்த துடன் வழக்கின் அடுத்த விசாரணையான மார்ச் 6 ஆம் திகதி வரை ஒவ்வொரு வாரமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை குளியாப்பிட்டி SSP அலுவலகத்தில் ஆஜராகுமாறு அவருக்கு உத்தரவிட்டார்.
சட்ட நடவடிக்கைகள் மட்டுமின்றி, இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
No comments