Vettri

Breaking News

நிகழ்நிலை காப்புச் சட்டம் குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் சமந்தாபவர் வேண்டுகோள் !!!





 கருத்துச் சுதந்திரத்தின் மீதான நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின்  டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை செவ்வாய்க்கிழமை சந்தித்த பேச்சுவார்த்தை நடத்திய போதே சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார சீர்திருத்தகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கடினமான பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின்  அர்ப்பணிப்பை இதன்போது சமந்தாபவர் வெளிப்படுத்தினார்.

இதேவேளை, ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும் ஆலோசனை சட்டமியற்றும் செயல்முறை குறித்தும் இதன்போது விவாதித்தனர். 

கருத்துச் சுதந்திரத்திற்கான வலுவான அமெரிக்க ஆதரவுள்ளதாகவும் நிகழ்நிலை காப்புச்சட்டம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்கமானது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கான தடைகளைத் தீர்க்க ஜனாதிபதி விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமந்தாபவர் வேண்டுகோள் விடுத்தார்.

No comments