Vettri

Breaking News

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் ஒருவர் காயம்!!





 பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து புத்தளம் - அநுராதபுரம் வீதியின் 15 ஆவது மைல் கல் அருகில் இன்று செவ்வாய்க்கிழமை (13) அதிகாலை ஒரு மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது.

புத்தளத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் அதே திசையில் சென்ற சிறிய ரக உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த அளுத்கம, புளியங்குளம் மேல் பிரிவைச் சேர்ந்த எச்.எம் ஹர்ஷன பிரதீப் என்ற நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறிய ரக உழவு இயந்திரத்தை செலுத்திச் சென்ற நபரே விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த காரின் சாரதி சாலியவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments