ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த நபர் – இன்று நீதிமன்றில் முன்னிலை !
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி, இடம்பெற்ற அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டது.
இந்தநிலையில், அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், 46 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கைது செய்தது. பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வீடுகளுக்கு சென்று ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
No comments