வீதியில் நடந்து சென்ற நபரொருவரின் மீது மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!!
வீதியில் நடந்து சென்ற நபரொருவரின் மீது வெட்டப்பட்ட மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஹங்குராங்கெத்த கட்டில்லாவல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.
இஸ்கொலவத்த அகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மரத்தை வெட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments