ரவுடிகளை வைத்து லீசிங் வாகனங்களை கைப்பற்ற முடியாது; புதிய சுற்றறிக்கை வெளியானது!!
ரவுடிகளை வைத்து லீசிங் வாகனங்களை கைப்பற்ற முடியாது; புதிய சுற்றறிக்கை வெளியானது
புதிதாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி லீசிங் வாகனங்களை கைப்பற்றுவதற்கு ரவுடி கும்பல்களை பயன்படுத்த அனுமதி இல்லை என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்தது.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் அசங்க ருவன் பொதுப்பிட்டிய மேலும் கூறுகையில்,
எமது கோரிக்கையின் பிரகாரம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் தலையீட்டில் 08.02.2024 அன்று விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது. RTM-199 என்ற சுற்றறிக்கை இலங்கையிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி குத்தகை முகவர் நிலையங்கள் மூலம் தன்னிச்சையாக வாகனங்களை கையகப்படுத்தவோ அல்லது பறிமுதல் மூலம் வாகனங்களை கைப்பற்றவோ முடியாது. பொலிஸாரின் தலையீடு இந்த சுற்றறிக்கையின் மூலம் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தினமும் செய்திகளுடன் இணைந்து யுத்த கள நிலவரங்களை அறிந்து கொள்ளும்
No comments