கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தர மாணவர்களுக்கு விழிப்புணர்வு!!
பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்ட செயலகத்தின் நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தர மற்றும் மாணவர் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று பாடசாலையின் அதிபர் எம்.ஐ ஜபீர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது பாவனையாளர் உரிமைகள்,பொறுப்புகள்,சட்டங்கள் , பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்மந்தமாக மாணவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இவ் விழிப்புணர்வு நிகழ்சிக்கு அதிதியாக சாய்ந்தமருது கோட்ட கல்விப் பணிப்பாளர் மலீக் கலந்து கொண்டார் இதில் பிரதான வளவாளராக அம்பாறை மாவட்ட நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத் மற்றும் புலன் விசாரணை அதிகாரி இஷட்.எம் ஸாஜீத்,எம்.எச்.எம் றிபாஜ் ஏ.பீ.எம் றிப்சாத், ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.
No comments