காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா !!
காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா திருப்பலியானது 04.02.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி அம்புறோஸ்
அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
கடந்த 4 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு சிந்தனைகள் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடும் இடம் பெற்றது.
இன்றைய திருவிழா திருப்பலியினை அருட்தந்தை டெஸ்மன்ராஜ் அடிகளார் தலைமைதாங்க அருட்பணியாளர் அம்புறோஸ் அடிகளாரும் இனைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்திருந்தார்கள்.
குழந்தை இயேசு திருவுருவ பவனியும் ஆலயத்தைச்சுற்றி எடுத்துவரப்பட்டு இறுதி செபத்துடன் புனித ஆசீரை பங்குத்தந்தை அருட்பணி அம்புறோஸ் அடிகளார் இறைமக்களுக்கு வழங்கி வைத்தார்.
அத்தோடு பங்குத்தந்தை அவர்களினாலும், திருவிழா சிறப்பாக அமைய சகல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்ததோடு, திருவிழா வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது...
செய்தியாளர்
க.டினேஸ்
No comments