இடைநடுவில் நிறுத்தப்பட்ட வீடமைப்பு திட்டங்களை இவ்வருடம் பூர்த்தியாக்க முடிவு!!
நிர்மாணப் பணிகள் முடிவுறாத நிலையில் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை விரைவில் நிறைவுசெய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான நிதியை ஒதுக்க தீர்மானித்துள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில் இதுவரை நிர்மாணப் பணிகள் நிறைவுபெறாத வீடமைப்புத் திட்டங்களை இந்த வருடத்திற்குள் நிறைவுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவிய கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு இவ்வீடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தன. வீட்டுக்கடன் மற்றும் உதவி வேலைத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிதி தற்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கும் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments