Vettri

Breaking News

மத்திய வங்கி நூல் அறுந்த பட்டம் போன்று செயற்படுகின்றது!!!




 


இலங்கை மத்திய வங்கி நூல் அறுந்த பட்டம் போன்று செயற்படுவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி பணியாளர்களது சம்பள அதிகரிப்பு நிதி அமைச்சரின் அனுமதிக்கு உட்பட்ட வகையில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நிதி அமைச்சரின் அனுமதி 

மத்திய வங்கி பணியாளர்களுக்கான சம்பள உயர்வு குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஏனைய துறைகளில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் போது நிதி அமைச்சரின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படுகின்றது. 

மத்திய வங்கியின் பணியாளர்களது சம்பளங்களும் நிதி அமைச்சரின் அனுமதியுடனேயே வழங்கப்பட வேண்டும்.

மத்திய வங்கி அரசின் பிடியிலிருந்து விலகியதனால் இவ்வளவு பாரிய தொகை சம்பள அதிகரிப்பினை மேற்கொள்ள முடிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

No comments