Vettri

Breaking News

நடிகை பூனம் பாண்டே காலமானார்!!





 நடிகை பூனம் பாண்டே (32) புற்றுநோயால் இன்று வெள்ளிக்கிழமை (02) காலை காலமாகியுள்ளார். 

சர்ச்சைக்குரிய நடிகை பூனம் பாண்டே கர்ப்பை புற்றுநோயால்  உயிரிழந்துவிட்டதாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 

பூனம் பாண்டே 2011 உலகக் கோப்பையில் இந்தியா வென்றால் நிர்வாணமாக வீடியோ வெளியிடுகிறேன் எனக் கூறி பின்னர் கூறியபடி செய்தும் பிரபலமானவர்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே, பூனம் பாண்டே கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக அவர் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பூனம் பாண்டே இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவர் 32 வயதிலே உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

No comments