ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை!!
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று வைபவரீதியாக ஆரம்பமானது.
அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடன உரை;
2022 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9 சதவீதம் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக 2023 ஆம் ஆண்டின் இறுதியில் உபரி நிலையை இலங்கை அடைந்தது.
2021 ஆம் ஆண்டில் 194,495 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை 2023 ஆம் ஆண்டில் 1,487,303 ஆக உயர்த்த முடிந்ததாகவும், இந்த ஆண்டு ஜனவரியில் மாத்திரம் 200,000 க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், வருடாந்தம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 5 மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொலைநோக்குடன் தயாரிக்கப்பட்ட நுட்பமான பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தியன் மூலமே 2022 ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சீர் செய்ய முடிந்ததாகவும் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் வரி செலுத்துவதற்கு பதிவு செய்தோர் தொகை 437,547 ஆக இருந்தததுடன் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் அதனை 1,000,029 ஆக அதிகரித்க்கப்பட்டுள்ளதாகவும் , இது 130% அதிகரிப்பைக் காட்டுவதாகவும் தெரிவித்தார்.
தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊழல் ஒழிப்பு சட்டம் போன்ற சட்டங்களை அமுல்படுத்தும் போது அரசியல் அல்லது வேறு எந்த அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட மாட்டாது என்பது நாட்டின் முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கையகப்படுத்தப்பட்ட பல இலட்சம் ஏக்கர் காணிகளிலிருந்து உயர்ந்தபட்ச உற்பத்தியைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வீணாகும் காணிகளை அந்நிய செலாவணி மூலங்களாக மாற்றி பொருளாதார அபிவிருத்தியை வலுப்படுத்துவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments