மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!!
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் இன்று திங்கட்கிழமை (05) முதல் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சை நிமித்தம் டிசம்பர் 23 திகதி முதல் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையின் விவசாய விஞ்ஞான வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியானதால் பாடசலை விடுமுறை நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியான வினாத்தாளை இரத்து செய்து பெப்ரவரி 1 ஆம் திகதி பரீட்சை மீண்டும் இடம்பெற்றது. இதன்காரணமாக பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த பாடசாலை இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
No comments