Vettri

Breaking News

மோட்டார் சைக்கிளில் விபத்து – பாடசாலை மாணவர் பலி!





 மித்தெனிய வலஸ்முல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது காயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

No comments