திருகோணமலை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு! !
திருகோணமலை சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில்
காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை (06) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை கிண்ணியா மஹ்ரூப் நகரைச் சேர்ந்த மொஹமட் அலி உவைஸ் முகம்மது உபயத்துல்லா என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 2 ஆம் திகதி திருகோணமலை சிறைச்சாலையின் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், தலையில் காயமடைந்து திருகோணமலை பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நபரே உயிரிழந்துள்ளார்.
No comments