Vettri

Breaking News

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா


























பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் புதிய காரியாலய திறப்பு விழா இன்று வைத்தியசாலை தெற்கு வீதியில் உத்தியோபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

 சாய்ந்தமருத்துக்கான ஜனாசா நலன்புரி காரியாலயம் தேவையாக இருந்தபோது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் ஜனாஸா நலன்புரி  அமைப்பினரின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது வைத்தியசாலை தெற்கு வீதியில் அமைந்திருந்த சாய்ந்தமருது பிரதேச செயலகத்துக்கு சொந்தமான கட்டிடத் தொகுதியினை மீள் பாவனைக்கு உட்படுத்தி  முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் நினைவாக புனர்நிர்மானம் செய்து   மக்களின் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக   கையளிக்கப்பட்டது . 
 

 இந்நிகழ்வானது  ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களின் ஒருவரான ஏ.எஸ். அஸ்வரின் நெறிப்படுத்தலில் ஆரம்பமானதுடன்   சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக் , Myown group நிறுவனத்தின் பணிப்பாளரும் Rizley Musthafa Education Aid அமைப்பின் தலைவர் முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மர்ஹூம் மயோன் முஸ்தபாவின் மகன்  எம். றிஸ்லி முஸ்தபா ஆகியோர்  அதிதிகளாக கலந்து கொண்டனர்.  

மேலும் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள்  பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான யூ.கே. காலித்தீன் நன்றியுரை நிகழ்த்தினார்.


இது தவிர சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை தன்னார்வத்துடன் முன்னெடுப்பதற்காக அமைப்பொன்று உருவாக்க்கப்பட்டுள்ளது. சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை எனும் பெயரிலான இந்த அமைப்பு  கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்படடு இயங்கி வந்தது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்களின் நலன் கருதி  சாய்ந்தமருது பிரதேசத்தில் இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் வறிய குடும்பங்களின் நலன்கருதி இளைஞர்கள் சமூக ஆர்வலர்கள் எனப்பலரின் பங்களிப்புடன் இவ்வமைப்பு ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் மக்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் மற்றும் கால தாமதங்களை நிவர்த்தி செய்வதற்காகவும் தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுங்கமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்பாக இயங்கி வருகின்றது.

இதன் மூலம் ஜனஸாவைக் குளிப்பாட்டல் கபனிடல்  ஜனாசாக்களைக் கொண்டு செல்லல் நல்லடக்கம் செய்தல் போன்ற சேவைகள் இவ் அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

No comments