Vettri

Breaking News

இன்று முதல் முட்டை விலை உயர்வு!!




 


இன்று (12) முதல் முட்டை விலையை உயர்த்த அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.

முட்டை விநியோகச் செலவுகள் அதிகரித்துள்ளதாலும், வர்த்தகத்தைப் பாதிக்கும் பல செலவுகளாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் புத்திக வீரசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை 58 ரூபாவாகவும் சில்லறை விலை 63 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது

No comments