ஐஸ் போதைப்பொருளுடன் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பிரிவின் கான்ஸ்டபிள் கைது!!!
ஐஸ் போதைப்பொருளுடன் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் இன்று (26) கைது செய்யப்பட்டதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிள் 30 வயதுடைய மாவனெல்லை பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவராவார். இவர் தற்போது மிஹிந்தலை ருவங்கம பிரதேசத்தில் வசித்து வருகிறார்
அநுராதபுரம் கண்டி வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 23 வயதுடைய ஒருவரை சந்தேகத்தில் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே கான்ஸ்டபிளைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments