மட்டக்களப்பு மாவட்ட விவசாய அமைப்புக்களுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் கலந்துரையாடல்!!
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் விவசாய அமைப்புக்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது.
இதன்போது விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பிலும் அவற்றை நிவர்த்தி செய்ய முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டிருந்தது. விசேடமாக உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் பங்களிப்பு செய்யும் பாலங்கள் தொடக்கம் வீதிகள் வரை புனரமைப்பது, உற்பத்திகளை சந்தைப்படுத்தும் போது அவற்றுக்கான உத்தரவாத விலை நிர்ணயித்தல் மற்றும் யானை தொல்லைகளினால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது போன்ற பல்வேறு விடையங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
மேற்படி கலந்துரையாடலின் போது மாவட்ட அரசாங்க அதிபர் J.J முரளிதரன் , நீர்ப்பாசன பணிப்பாளர் (நீர்ப்பாசன திணைக்களம் மத்தி) S. நாகரெத்தினம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், தேசிய அமைப்பாளரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தனிப்பட்ட செயலாளருமான தம்பிராஜா தஜீவரன், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவித் திட்டமிடல் பணிப்பாளர் R.ஜதீஸ்வரன் , மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைப்புகளின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments